மார்ச் 2022 வரை தொடரும்!! மத்திய அரசு அதிரடி!!

 


இந்தியாவில் மார்ச் 2020 முதல் கொரோனா தடுப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மார்ச் முதல் பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.முதலில், 2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவித்தது.

பின்னர் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து மேலும் நீட்டிக்கப்பட்டு நவம்பர் 30 வரை என அறிவித்திருந்தது. தற்போது இத்திட்டம் மேலும் தொடரும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 2022 மார்ச் வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.