EWS பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு மறு பரிசீலனை- மத்திய அரசு முடிவு..!!

 

மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய (EWS) பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் திருத்தம் மேற்கொண்டவது. ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு இந்த சட்ட திருத்தம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் எழுதி வெற்றி பெற்றவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை முறையிட்டுள்ளனர். அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்ட உச்சநீதிமன்றம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதித்தது. மேலும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், விக்ரம் நாத் அமர்வு முன்பு பதிலளித்த மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பை மறு ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும். அதற்காக ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தது.

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மேலும் 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.