ராஜஸ்தானில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம்

 

ராஜஸ்தான் மாநிலம் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக பிகானிர் பகுதியின் மேற்கு வடமேற்கில் இருந்து சுமார் 413 கிலோ மீட்டர் தொலைவில், 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று 22-07-2021 காலை 07:42:15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நேற்று 21-07-2021 அதிகாலை 05:24:29 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.