undefined

அதிர்ச்சி... சட்டை அழுக்கா இருக்கு.. பயணியை விரட்டி விட்ட மெட்ரோ ஊழியர்கள்!

 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொட்டகல்சந்திரா மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்ய வந்த பயணி ஒருவரை பெங்களூரு மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். அவரது ஆடை சுத்தமாக இல்லை, சட்டை பட்டன் போடப்படவில்லை என்று கூறி ரயிலில் பயணம் செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதை பார்த்த சக ரயில் பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


அவர் பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் பிஎம்ஆர்சிஎஸ் ஆகியோரையும் டேக் செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், தடுக்கப்பட்ட பயணியிடம் உங்கள் சட்டை பட்டன் போட்டு ஆடை அணியச் சொல்லுங்கள். இல்லையெனில், உள்ளே செல்ல அனுமதிக்க மாட்டோம் என, மெட்ரோ ஊழியர்கள் திட்டினர். மெட்ரோ ஊழியர்களின் இந்த செயலுக்கு கண்டனம் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே மெட்ரோ ரயிலில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. பிப்ரவரி 26ஆம் தேதி, மெட்ரோ ரயிலுக்குள் நுழைய விடாமல் விவசாயி ஒருவரின் உடைகள் சுத்தமாக இல்லாததால் தடுத்து நிறுத்தப்பட்டார். ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தின் போது, சக பயணி ஒருவர் தலையில் முக்காடு அணிந்திருந்த விவசாயியை வீடியோ எடுத்து, உள்ளே அனுமதிக்க மறுத்து அவரை அவமானப்படுத்தி, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்