12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும்!பள்ளிக்கல்வித்துறை !

 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 24 வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

அதில் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் நிச்சயம் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்.அரசின் நடவடிக்கைகள் மூலம் விரைவில் கொரோனா தொற்று குறைக்கப்படும்.

மாணவர்களின் எதிர்காலம், கல்வித்திறனை ஊக்குவிக்கும் வகையில் 12ம் வகுப்பு தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதன்படி நிச்சயம் தேர்வுகள் நடத்த தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அசாதாரண சூழ்நிலையில் பொதுத்தேர்வை நடத்துவது குறித்து முதல்வருடன் விரிவாக ஆலோசித்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.