அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

 

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் அதீத வெப்பம் மனித குலத்திற்குக் கடுமையான அச்சுறுத்தலாக மாறிவரும் நிலையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அடுத்த சில மாதங்களில் இலட்சக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் எனப் புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தின் காலநிலை தாக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகெங்கிலும் தொடர்ந்து பதிவாகிவரும் உச்ச கட்ட வெப்ப நிலை காரணமாக, எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் சுமார் 4.5 லட்சம் மக்கள் வரையில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் தங்களது எச்சரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வளரும் நாடுகள் மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய பகுதிகளே இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் உலகளாவிய வெப்பமயமாதலின் தாக்கத்தை உணர்த்தும் இந்த அதிர்ச்சி அறிக்கை, சர்வதேச நாடுகளை உடனடியாகப் பசுமை விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் தற்காப்பு முன்னெச்சரிக்கைகளிலும் ஈடுபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.