உஷார்... உடலில் கொழுப்புச் சத்து அதிகரிப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்!

 

உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகரிக்கும் போது அது உடனடியாக வெளியில் தெரிவதில்லை. என்றாலும், தமனிகளில் படிவங்கள் சேர்ந்து ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும். அவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்வது பல்வேறு ஆபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவும்.

தமனிகளில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டம் தடைபட்டு, ஒரு கால் மட்டும் குளிர்பிடித்தது போல் இருப்பது, தோலின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும். இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படும் போது நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற ஆபத்தான அறிகுறிகள் உண்டாகலாம்.

கை மற்றும் கால்களில் திடீர் மரத்துப்போகும் உணர்வு ஏற்படுவதும் அதிகப்படியான கொழுப்பின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. கண்களைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் கொழுப்புப் படிவங்களோ அல்லது சாம்பல் நிற வளையங்களோ தோன்றுவதும் இதன் முக்கியமான வெளிப்புற அடையாளங்களில் ஒன்றாகும். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும், முறையான ரத்தப் பரிசோதனை மூலமே உடலில் கொழுப்பின் அளவைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.