வீட்டுக் கடன் வட்டி விகிதம்! சூப்பர் தகவல்கள்!

 

வீங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகிறது. அதில் மிக முக்கியமானது வீட்டுக்கடன். ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே வீடு வாங்க முடியும் என்ற நிலையை மாற்றி நடுத்தர மக்களின் கனவை நனவாக்கியதில் வங்கிகளுக்கு பெரும் பங்கு உண்டு. அதிலும் சில நிறுவனங்கள் மிகவும் குறைந்த நியாயமான விகிதத்தில் வட்டி தொகையை நிர்ணயித்துள்ளது.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளும் ஒவ்வொரு குடிமகன் வாங்கும் முதல் வீட்டிற்கு குறிப்பிட்ட அளவிற்கு மானியத்தை வழங்குகிறது. இந்தியாவில் 16 வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் 7 சதவீதத்திற்கும் குறைவான வட்டி விகிதத்தில் ரூ.75,00,000 வரை வீட்டுக் கடன்களை வழங்குகின்றது.

குறிப்பாக தனியார் நிதி நிறுவனம் கோடக் மஹிந்திரா மற்றும் பஞ்சாப் & சிண்ட் வங்கி ஆகியவை 6.65 சதவீத முதல் குறைவான வட்டி விகிதங்களில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்கிய கடன்களில் வட்டி விகிதங்களில் மாற்றம் இருப்பின் வேறு ஒரு நிதி நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

2019ல் நாட்டின் மிக குறைந்த வட்டி விகிதம் 8.40% ஆக மட்டுமே இருந்தது. 2020 ல் ரிசர்வ் வங்கியால் ஆர்.எல்.எல்.ஆர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் நாட்டின் மிக குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.49 – 6.95% ஆக குறைந்துள்ளது. ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து மற்றொரு வங்கிக்கோ அல்லது நிறுவனத்திற்கோ மாறுவதற்கு குறைந்தபட்சம் 35 – 50 அடிப்படை புள்ளிகள் வித்தியாசம் இருக்க வேண்டியது அவசியம். அதிலும் மிக முக்கியமானது முதலில் கடன் பெற்ற நிறுவனம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.