வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் மூச்சுத்திணறலை உணர்வது எப்படி?

 


இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் மூச்சுத் திணறல் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. தேவையான நேரத்தில் ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாததால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.இயல்பான சுவாசிக்கும் திறனை மீறி மிக வேகமாக காற்றை உள்ளே இழுக்க வேண்டி இருந்தாலே காற்று போதுமானதாக இல்லை என அர்த்தம்.

நுரையீரலுக்கு போதுமான காற்று கிடைக்காத நிலையில் நெஞ்சில் இருக்கம், வலி போன்றவை ஏற்படலாம். ஏற்கனவே ஆஸ்துமா, நுரையீரல் நோய்த் தொற்று, இதய நோய் இருப்பவர்களும் மூச்சு திணறல் உருவாகலாம். கொரோனா வைரஸ் நுரையீரலில் காற்று அறைகளைப் பாதிப்படையச் செய்வதால் தான் மூச்சுத்திணறல் உருவாகிறது. உடல் பருமன், சர்க்கரை நோய்ப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஆபத்து அதிகமாக உள்ளது.


சாதாரணமாக மாடிப்படி ஏறுதல், நடக்கும் போது மூச்சுத் திணறல் இருந்தால் அது மைல்ட் பாதிப்பு. மூச்சுத் திணறல் அதிகரித்தால் அது உயிரிழப்பு வரை சென்றுவிடும் அபாயமும் உண்டு. கொரோனா உறுதிசெய்யப்பட்டவுடன் ஆக்சிமீட்டர் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.தொடர்ந்து பேச முடியாத அளவுக்கு மூச்சு வாங்கினால் உடனடியாக தீவிர பாதிப்படைந்துள்ளனர் என கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவ உதவியை நாடிவிடுவது நல்லது.