உஷார்…! நீங்க பஸ்ல பயணிப்பவரா? இதைப் படிங்க முதல்ல!!

 

மயிலாடுதுறையில் சுமார் 90 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. தரங்கம்பாடி சாலையில் பேருந்து சென்ற போது, திடீரென பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து விழுந்தது.

நல்வாய்ப்பாக உடைந்து விழுந்த படிக்கட்டில் நின்றுகொண்டு வந்த கல்லூரி மாணவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை. படிக்கட்டு உடைந்துவிடும் என்று தெரிந்த போது மாணவர்கள் ஏற்கனவே மேலே ஏறிவிட்டதால் எதுவும் நடக்கவில்லை.

பின்னால் படிக்கட்டு உடைந்தது ஓட்டுநருக்கு தெரியாது. மாணவர்கள் சத்தம் போடவும் அவர் வாகனத்தை நிறுத்தினார். நடத்துநர் வந்து பார்த்து, சாலையில் கிடந்த படிக்கட்டை எடுத்து வைத்துக் கொண்டார்.

பேருந்து படிக்கட்டில் ஆபத்தை உணராமல் பயணம் செல்லும் பலருக்கும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக இருக்கும். மாநில அரசு போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதன் மூலம் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.