ATMல் பணம் எடுக்க புதிய விதிமுறைகள்! ஆர்பிஐ அதிரடி!

 

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஏடிஎம் மில் பணம் எடுப்பதில் சில நிபந்தனைகளை ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளது.
தற்போதைய வழக்கப்படி கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். மற்ற வங்கிகளின் ஏடிஎம்.மில் அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப 3 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஏடிஎம்.களை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
ஏடிஎம் பராமரிப்புச் செலவை ஈடு செய்வதற்காக, ஏடிஎம் கார்டு பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட ஏடிஎம்.மை அதிகம் பயன்படுத்துபவர்களின் கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு தற்போதுள்ள ரூ.20க்கு பதிலாக ரூ.21 வசூலித்துக் கொள்ளலாம்

இந்த புதிய விதி முறைகள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும்’ எனவும், ஆகஸ்ட் 1 முதல் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.15 முதல் ரூ. 17 வரையும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ. 5 முதல் ரூ. 6 வரையும் வாடிக்கையாளர் சேவை கட்டணம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.