பெற்றோர்களே உஷார்... குழந்தைகளுக்கு டயப்பர் யூஸ் பண்றீங்களா? இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

 

கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து தனித்தனித் தீவைப் போல புறாக்கூண்டு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறோம். இன்னும் சிலர் சிங்கிள் பேரெண்ட் என்று சொல்லிக் கொள்வதைப் பெருமையாகவே நினைக்கிறார்கள். வீட்டு பெரியவர்கள் துணையில்லாமல் குழந்தை வளர்ப்பது என்பது சவால் தான். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் மனசு பதறும். பெரிய ஆபத்தை அறியாமல், சாதாரணமாக எடுத்துக் கொள்வோம். டயப்பர் பயன்படுத்துவதால் என்னென ஆபத்து என தெரிந்து கொள்ளலாம் வாங்க... குழந்தைகளுக்கு டயப்பரிங் செய்வது பெற்றோருக்கு வசதியான செயலாக இருந்தாலும், டயப்பர்களிலும் சில குறைபாடுகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காட்டன் துணிகள் குழந்தைகளின் தோலுக்கு பாதிப்பில்லாதவை மற்றும் அவற்றை கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் ரசாயனம் கலந்த நவீன டயப்பர்களை அணிவது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதைக் காட்டுகிறது.

ஆய்வின்படி, நவீன டயப்பர்களில் தயாரிப்பின் போது சில நச்சுப் பொருட்கள் கலக்குகின்றன. இது குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக இளம் வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே கெமிக்கல் கலக்காத சுத்தமான காட்டன் துணிகளோ அல்லது டயப்பர்களை பயன்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது. இதனால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுமட்டுமின்றி, முக்கியமாக குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பரை மாற்றுவது அவசியம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்