05-11-2026 | இன்றைய ராசிபலன்கள் | உங்க அதிர்ஷ்ட நிறமும், அதிர்ஷ்ட எண்ணும் இது தான்!
மேஷம்
இன்று உங்களின் பணவரவு திருப்திகரமாக அமையும். இருப்பினும், தேவையற்ற மற்றும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது எதிர்காலத்திற்கு நன்மை தரும். எத்தகைய பணியைச் செய்வதற்கும் முன்பாக, அதன் நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து செயல்படுவது நல்லது. பயன் தராத வீண் முயற்சிகளைத் தவிர்ப்பது மன நிம்மதியைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
ரிஷபம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று மிகவும் சாமர்த்தியமாகவும் விழிப்புணர்வுடனும் செயல்படுவது அவசியமாகும். தொழில் போட்டிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
மிதுனம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து அனுசரித்து வேலை வாங்குவது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும்போது டென்ஷன் இல்லாமல் அமைதியைக் கடைப்பிடிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கடகம்
இன்று பயன் தராத முயற்சிகளைக் கைவிட்டு, எத்தகைய வேலையையும் நன்கு ஆராய்ந்து செயல்படுவது வெற்றியைத் தரும். மாணவர்கள் தங்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் கவனமாகச் செய்வது நன்மை பயக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
சிம்மம்
இன்று எந்தச் சூழ்நிலையிலும் முழு தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். உங்கள் மனதில் உள்ள பிடிவாத குணத்தை சற்றுத் தளர்த்திக் கொண்டால் எதிலும் எளிதில் முன்னேற்றம் காண முடியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவதில் தீவிர ஆர்வம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கன்னி
இன்று நீங்கள் மேற்கொள்ளும் வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்களைத் தரும். தொழில் மற்றும் வியாபாரம் மூலமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்கான தேவையான ஆதரவு தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தமது புத்திசாதுரியத்தால் அலுவலகப் பணிகளைத் திறம்படச் செய்து முடித்து உயர் அதிகாரிகளின் மதிப்பையும் மரியாதையையும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
துலாம்
இன்று குடும்பத்தில் அமைதியான மற்றும் நிம்மதியான சூழல் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யமும் ஒற்றுமையும் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலமாக பெருமையும் மகிழ்ச்சியும் கிடைக்கும். வீடு மற்றும் வாகனங்களைப் புதுப்பிக்க அல்லது புதிய சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்; அதில் சாதகமான பலன் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
விருச்சிகம்
இன்று உங்களின் மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் விரும்பிய வெற்றியைத் தரும். மாணவர்கள் தங்கள் புத்திசாதுரியத்தால் எதிலும் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுகளையும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
தனுசு
இன்று மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். எந்த இடத்தில் பேசினாலும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் புதிய வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாகக் காரியங்கள் நடந்தாலும், மனம் தளராமல் இருப்பது நன்மையை வழங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
மகரம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது வணிகப் பங்காளிகளை அனுசரித்துச் செல்வது வியாபார வளர்ிக்கு பெரிதும் உதவும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடமும் சக ஊழியர்களிடமும் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கும்பம்
இன்று குடும்ப விவகாரங்களில் வெளியாட்கள் அல்லது அந்நிய நபர்களின் தலையீட்டை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது மன அமைதியைத் தரும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் சிறிய கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாகப் பேசுவது நன்மையை அளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
மீனம்
இன்று எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல் காரியங்களைச் செய்வது வெற்றியைத் தரும். தேவையில்லாத வாக்குறுதிகள் மற்றும் உத்திரவாதங்களை அளிப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5