undefined

தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்... 4 பேர் கைது!

 

தூத்துக்குடியில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 இளைஞர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கபீர்தாசன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார், போலீசார் ரோச் பூங்கா அருகே நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள உப்பளப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் விற்பனைக்காக ஒரு கலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக மாப்பிள்ளையூரணி, வெற்றிவேல் நகர் கார்த்திக் (30), எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மகா வருண்குமார் (18), மட்டக்கடையைச் சேர்ந்த விஷால் (18), புதுக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த தீபக் (19) ஆகிய 4பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?