மதுராந்தகம் அருகே கொடூரம் - மாற்றுத்திறனாளி 5ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - 10 பேர் பிடிபட்டு விசாரணை!

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கொங்கரை பகுதியில், 5-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முன்தினம் சிறுமியின் பெற்றோர் குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி சிறுமியை இலக்காகக் கொண்டு மர்ம நபர் இந்த வன்கொடுமைச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

படுகாயமடைந்து அதிர்ச்சியிலுள்ள பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் இதுதொடர்பாக 10 பேரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியை விரைவில் கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கோரிக்கை விடுத்துள்ளனர்.