undefined

சென்னை உட்பட 10   மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!  

 

மோந்தா புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடர்கிறது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு, தென் மற்றும் வடமேற்கு மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மோந்தா புயல் தீவிரமடைந்து கரையைக் கடக்கும் நிலையில், கடலோர மாவட்டங்களில் வானம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!