10 லட்சம் வீடுகள்.. திமுக தேர்தல் அறிக்கையில் செம மாஸ்.. முழு விபரம்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் மகளிர், முதியோர் மற்றும் மாணவர்களுக்கான நலத்திட்டங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை: தற்போது வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை: முதியோர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,200-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

10 லட்சம் வீடுகள்: அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காக 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

அரசுப் பணிகள்: அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1.5 லட்சம் பணியிடங்கள் எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக நிரப்பப்படும்.

பதவி உயர்வு: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு கிடைக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காலை உணவுத் திட்டம்: அரசுப் பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இனி 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

புதுமைப் பெண் திட்டம்: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படும் 'புதுமைப் பெண்' திட்ட உதவித்தொகை மாதம் ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.

காப்பீட்டுத் திட்டம்: முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

விவசாயிகள் நலன்: பேரிடர் காலங்களில் பயிர் இழப்பீடு ஹெக்டேருக்கு ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

பால் கொள்முதல்: பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும்.

சுகாதாரம்: சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்காக மாநிலம் முழுவதும் டயாலிசிஸ் (Dialysis) வசதிகள் இருமடங்காக அதிகரிக்கப்படும்.