10% இடஒதுக்கீடு செல்லும் !! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

 

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் 1980களில் இவர்களுக்கு  கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. 2010ல்  பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து மோடி அரசு பாராளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டம் தற்போது  குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமலில் உள்ளது. இதனை எதிர்த்து, யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பு , திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  உட்பட பலரும் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை அமைவதாக கூறி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி  பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பை  அளித்துள்ளது. 5  நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!