ரூ.100-க்கு 10 காய்கறிகள்... இன்று முதல் சிறப்பு விற்பனை ஆரம்பம்!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கிப் பயன்பெறும் வகையில் தமிழக அரசு புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. கூட்டுறவுத்துறை சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ ரூ.100-க்கு இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

இன்று நவம்பர் 5-ம் தேதி தொடங்கும் இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 7-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் தொகுப்புகள் விற்பனை செய்யப்படும். சென்னையில் மட்டும் 4 நடமாடும் காய்கறிக் கடைகள் மூலமாகவும் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி தலா 500 கிராம்; கத்தரிக்காய், உருளைக்கிழங்கு தலா 250 கிராம்; கேரட், பீன்ஸ் தலா 200 கிராம்; பச்சை மிளகாய், எலுமிச்சை தலா 100 கிராம்; இஞ்சி 50 கிராம் மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு தேங்காய் இடம்பெறும்.

ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், அதற்கு ரூ.100 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. கூடுதலாகவோ குறைவாகவோ பணம் வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.