undefined

 கனமழை... கதறும் விவசாயிகள்... 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின!

 

 தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவில் நடவுசெய்த 3 நாட்களே ஆன நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை, வெள்ளத்தால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இந்நிலையில், நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை செப்டம்பர் மாதம் தொடங்காத நிலையில், விவசாயிகள் நிலங்களை தயார் செய்தநிலையில் காத்திருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையை நம்பி விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டினர். 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ெசய்துங்கநல்லூர், முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் நாற்றுக்களை நடவு செய்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. மாலை 3.30 மணி முதல் இரவு வரை பலத்த மழை கொட்டியது. இதனால் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் சுற்றுவட்டாரங்களில் சாலைகள், தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. செய்துங்கநல்லூர் பகுதியில் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை முதல் சாரல் மழைகொட்டியது. மாலை 5 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு வரை நீடித்தது. இதனால், பகத்சிங் பஸ்நிலையம், மதுரை மெயின்ரோடு, காய்கறி மார்க்கெட், டிபி ரோடு, காமராஜர் சாலை, இரும்பு ஆர்ச், சன்னதி தெரு, கோவில் நாழி கிணறு பஸ்நிலையம் செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி கிடந்தது. 

இதே போன்று, சுற்றுவட்டாரமான வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், ஆலந்தலை, காயாமொழி, தளவாய்புரம், நடுநாலுமூலை கிணறு, கீழநாலுமூலைகிணறு, நா.முத்தையாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!