2 வாரத்தில் 100 பேர் பணி நீக்கம்!! இணைநிறுவனர் ராஜினாமா!! காலியாகும் சொமேட்டோ !!

 

வீடு தேடி உணவுப்பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முண்ணனியில் இருப்பது சொமேட்டோ நிறுவனம்.இந்நிறுவனம் சமீபத்தில்  3 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குறைந்தது 100 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2 வாரங்களாக அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்க்ம செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் சொமேட்டோ நிறுவனத்தின் இழப்பீடு ரூ.2.51 பில்லியன். இந்த தொகை முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொமேட்டோ நிறுவனத்தின் வருவாய் ரூ.10.24 பில்லியனில் இருந்து ரூ.16.61 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  நடைமுறை வழக்கமான ஒன்று தான் என சொமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மோஹித் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!