சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - 11 பேர் பலி; 30 பேர் படுகாயம்!

 

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அமைந்துள்ள தங்கச் சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில், வேலை செய்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சூடானின் செங்கடல் மாகாணத்தில் உள்ள ஒனி நகரில் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் அந்தச் சுரங்கத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இடிபாட்டில் சிக்கி 11 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் இருந்து படுகாயமடைந்த 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சுரங்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக் கூடிய மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.