undefined

இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள்... உடனே விண்ணப்பியுங்க!

 

இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி (SEBI) நிறுவனம், குழு ‘ஏ’ பிரிவில் உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொது, சட்டம், தகவல் தொழில்நுட்பம், ஆய்வு, அதிகார மொழி மற்றும் பொறியியல் பிரிவுகளில் மொத்தம் 110 காலியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 30 முதல் நவம்பர் 30 வரை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம்.

பொது பிரிவில் 56, சட்டப் பிரிவில் 20, தகவல் தொழில்நுட்பத்தில் 22, ஆய்வில் 4, அதிகார மொழி பிரிவில் 3, பொறியியல் (எலக்ட்ரிக்கல்) 2, பொறியியல் (சிவில்) 3 பணியிடங்கள் உள்ளன. சம்பளம் மாதம் ரூ.62,500 முதல் ரூ.1,26,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். தகுதி – பொருளாதாரம், வணிகம், நிதி, புள்ளியியல், சட்டம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், ஏஐ, டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் பட்டம், முதுகலைப் பட்டம் அல்லது சிஏ, சிஎஸ் போன்ற தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு மூன்று கட்டங்களாக – முதல்நிலை, இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடைபெறும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணம், மற்ற பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணம். விண்ணப்பங்கள் https://www.sebi.gov.in
 என்ற இணையதளம் வழியாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!