குஜராத்தில் கட்டுமானப் பணியின்போது கட்டிடம் இடிந்து விபத்து - 12 தொழிலாளர்கள் மீட்பு, மீட்பு பணிகள் தீவிரம்!
குஜராத் மாநிலம் காந்திநகரில் வணிக வளாகக் கட்டுமானப் பணியின் போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காந்திநகரில் உள்ள 'பாஸ்கி தி எம்பயர்' வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று இரவு 9:30 மணியளவில் நடைபெற்று வந்தபோது இந்த விபத்து நேரிட்டது. திடீரெனச் சாரக் கூரை சரிந்து விழுந்ததோடு, அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 12 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 10 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடும் அஞ்சப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் நள்ளிரவையும் தாண்டித் தீவிரமாக நடந்து வருகின்றன.