12 வயதிலேயே வனவிலங்கு பாதுகாப்பில் சாதனை; சிறுவனைப் பாராட்டி கடிதம் எழுதிய டேவிட் அட்டன்பரோ!

 

 

இங்கிலாந்தின் தெற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் லியோ சோர்டெல்லோ, விலங்குகள் மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் பணியில் சிறுவயதிலேயே ஈடுபட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில், தனக்கு 6 வயதாக இருந்தபோதே அழிந்து வரும் விலங்கினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் லியோவுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, யூடியூப் மற்றும் பாட்காஸ்ட் வாயிலாக விழிப்புணர்வுப் பிரசாரங்களைத் தொடங்கினார்.

அவரது முயற்சிகள் மூலம் விலங்குகள் நல அமைப்புகள் மற்றும் காடுகளை மறுசீரமைக்கும் திட்டங்களுக்காக இதுவரை 13 ஆயிரம் பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.14 லட்சத்துக்கும் அதிகம்.

லியோவின் சுற்றுச்சூழல் சேவையைப் பாராட்டி, புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் சர் டேவிட் அட்டன்பரோ கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பிரிட்டிஷ் சிட்டிசன் இளைஞர் விருது, லண்டன் ஈக்கோ சாம்பியன் விருது உள்ளிட்ட அங்கீகாரங்களும் அவருக்குக் கிடைத்துள்ளன.தற்போது ‘பார்ன் பிரீ’ என்ற சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் இளநிலை தூதுவராகவும் லியோ செயல்பட்டு வருகிறார்.