12,692 பேருந்துகள்... நாளை முதல் வெற்றிப் பயணம் திட்டம் தொடக்கம்... முதல்வர் நெகிழ்ச்சி!

 

 

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் நாளை (அக்டோபர் 2) முதல் அமலுக்கு வருகிறது.இதுவரை நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சாதாரண பேருந்துகளிலும், 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வந்தனர். தற்போது இந்த வசதி மேலும் பல்வேறு அரசு பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும். மேலும், புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் இந்த இலவசப் பயண வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 12,692 அரசு பேருந்துகள் கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்களின் பயணச் செலவை குறைத்து, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அவர்கள் தடையின்றி பங்கேற்கும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, நாளை முதல் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், தங்களது வழித்தடத்துக்கு பொருந்தும் பேருந்துகளில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பது, தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு முக்கியமான பலனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கால அவகாசம் நேற்று நிறைவடைந்த நிலையில், நாளை முதல் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட லாரிகளில் மட்டுமே கனிம வளங்களை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கனிம வளங்களை ஏற்றிச் செல்ல சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் லாரிகள் பதிவு செய்துள்ளன. ஆனால் இதுவரை சுமார் 24 ஆயிரம் லாரிகளில் மட்டுமே ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கனிம வளத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மீதமுள்ள லாரி உரிமையாளர்கள் உடனடியாக ஜி.பி.எஸ். கருவியை பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ். கருவி இல்லாத லாரிகளுக்கான அனுமதி சீட்டு எனப்படும் டிரிப் ஷீட் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அனுமதி இல்லாமல் கனிம வளங்களை ஏற்றிச் செல்ல முடியாது.ஜல்லி மற்றும் எம்-சாண்ட் மட்டுமின்றி கருங்கல், மணல் உள்ளிட்ட கனிம வளங்களையும் ஜி.பி.எஸ். இல்லாத லாரிகளில் ஏற்றிச் செல்ல அனுமதி கிடையாது. விதிகளை மீறி கனிம வளங்களை கொண்டு செல்வது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கனிம வளத்துறை தெரிவித்துள்ளது.

கனிம வளங்களை முறைகேடாக வெட்டி எடுத்தல் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கனிம வளங்களை கொண்டு செல்லும் நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனால் ஜல்லி, எம்-சாண்ட், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.