undefined

 தனியார் கல்லூரியில் 128 மாணவர்கள் திடீர்  உடல்நலக்குறைபாடு... பெரும் பரபரப்பு! 

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் 128 மாணவர்கள் உணவு உட்கொண்டதையடுத்து ஒவ்வாமை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்கும் இந்தக் கல்லூரி விடுதியில் சுமார் 4 ஆயிரம் பேர் தங்கி வருகின்றனர். கடந்த 26ஆம் தேதி இரவு வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீர் உட்கொண்ட பிறகு மாணவர்கள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர்.

உடனடியாக கல்லூரி நிர்வாகம் அவர்களை கல்லூரி மருத்துவமனையிலும் பின்னர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுப்பியது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது, உணவகத்தில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரில் குறைபாடுகள் இருந்தது உறுதியாகியுள்ளது. குடிநீர் அசுத்தமாக இருந்ததே மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், நவம்பர் 2ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும், வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு உணவு பாதுகாப்புத் துறை மேற்பார்வையில் பரிசோதிக்கப்பட்ட பிறகே வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!