14 வருட காதால்... நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யாரு தெரியுமா?!
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது 14 வருட காதலர் இசையா நட்டரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இத்தாலியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அஞ்சனா தனது திருமணப் புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “To forever” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், #14yearslater என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். இது இருவரின் நீண்டகாலக் காதல் பயணத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இத்தாலியின் கோமோ ஏரிப் பகுதியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகையாக உள்ளார். அஞ்சனா திரைத்துறையில் நடிப்பதற்குப் பதிலாகத் தொழில்முனைவில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியதைத் தொடர்ந்து, ரசிகர்கள் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.