சோஷியல் மீடியா மூலம் அறிமுகமான 14 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தூத்துக்குடி இளைஞர் போக்சோவில் கைது!

 

தூத்துக்குடியில் சமூக வலைதளம் மூலமாக அறிமுகமாகி, 14 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மறக்குடி தெருவைச் சேர்ந்த டிசான் (19) என்பவரோடு, சமூக வலைதளம் மூலமாக அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த டிசான், அச்சிறுமியுடன் ஆன்லைன் மூலம் நண்பராகப் பழகி வந்துள்ளார்.

நாநாளடைவில் சிறுமியுடன் பழகிய டிசான், திடீரென அச்சிறுமிக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, நடந்துகொண்ட சம்பவங்கள் குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையப் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் டிசானைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.