மதிய உணவு சாப்பிட்ட 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!!

 

 

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஐஐஐடி-பாசார் என்றும் அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அறிவுத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில், கிட்டத்தட்ட 150 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பின் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் முஷாரப் அலி ஃபரூக்கி கூறுகையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட 150 மாணவர்களில் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று கூறினார்.

தற்போது அனைத்து மாணவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். எனினும், அவர்களில் இருவரின் உடல்நிலை மோசமாக உள்ளதால், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விடுதியின் மெஸ் ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், வளாக மருத்துவமனையில் 14 டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

இதுகுறித்து தெலுங்கானா அமைச்சர் இந்திரகரன் ரெட்டி செய்தி நிறுவனமான பிடிஐயிடம் கூறுகையில், ​​“மாணவர்களுக்கு மதிய உணவாக முட்டை, கறி மற்றும் சாதம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 150 மாணவர்கள் உணவை சாப்பிட்ட பிறகு மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர். அனைத்து மாணவர்களின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது. வளாகத்தில் மொத்தம் 600 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டனர். 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு பாசார் வந்து மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மற்ற மருத்துவக் குழுக்களும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?