12-வது, ITI, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1,626 பணியிடங்கள் - முழு விபரம்!

 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,626 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் பிரிவுகளில் இந்த வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மொத்த காலியிடங்கள்  1,626 பணியிடங்கள். இந்த அப்ரண்டிஸ் பயிற்சித் திட்டம் முழுமையாக ஒரு ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும். பயிற்சியின் போது மத்திய அரசு விதிகளின்படி மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம். 

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள், டிப்ளமோ பொறியியல் பயின்றவர்கள், பி.எஸ்சி, பி.ஏ, பி.காம் போன்ற ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.iocl.com என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அல்லது கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான வயது வரம்புச் சலுகைகள், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மற்றும் மண்டல வாரியான காலியிடங்களின் விபரங்கள் உள்ளிட்ட முழுமையான அறிவிப்பு விவரங்களை IOCL இணையதளத்தில் தேர்வர்கள் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசு நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.