சிவகங்கை அருகே 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு!
Aug 2, 2026, 19:50 IST
சிவகங்கை அருகே கண்மாய் பகுதியில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 4 அடி நீளமுள்ள அரிய 'வாணாதிராயர் கல்வெட்டு' ஒன்று தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் 'தெய்வ மாவலி வாணாதிராயர்' என்பவரால் வழங்கப்பட்ட நில தானம் குறித்த முக்கிய வரலாற்றுச் செய்திகள் செதுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் உள்ள தமிழ் எழுத்து வடிவங்களின் அமைப்பைக் கொண்டு, இது கி.பி. 1515 முதல் 1533 வரை ஆட்சி புரிந்த 'சுந்தர தோளுடையான் மாவலி வாணாதிராயன்' காலத்தைச் சேர்ந்தது எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கண்மாய் பகுதியில் கிடைத்துள்ள இந்த 4 அடி நீளக் கல்வெட்டு, அப்பகுதியின் பண்டைய வரலாற்றையும் வாணாதிராய மன்னர்களின் கொடைத் தன்மையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.