தீவிரமடைந்த பருவமழை... 17 மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (அக். 22) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்காது.
அதே நேரத்தில், சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!