அதிர்ச்சி வீடியோ!! கிரேன் உடைந்து விழுந்ததில் 17 பேர் பலி!!

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் மூன்றாம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில் சாலை அமைப்பதற்கான மேம்பாலம் கட்டும்பணிகள் இன்று அதிகாலை நடைபெற்று வந்தன.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும், விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் துறையின் அமைச்சர், அதிகாரிகள் சமபவ இடத்தில் உள்ளதாகவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


அதேபோல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் விபத்தில் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து பாதித்தோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!