undefined

பேருந்து நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு... குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!

 
 

 இமாச்சல பிரதேசம் மாநிலத்தில்  பிலாஸ்பூர் மாவட்டத்தில் பலுகாட் அருகே  நேற்று அக்டோபர் 7ம் தேதி  தனியார் பேருந்து பயணிகள் எண்ணிக்கை 30–35 பேரில் கனமழை காரணமான நிலச்சரிவால் மலைப்பகுதி இடிந்து விழுந்ததால், பேருந்து கற்பாறைகளுக்குள் புதைந்தது.18 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம்.2 குழந்தைகள் உட்பட 3  பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.


தீயணைப்பு துறை, காவல்துறை இணைந்து மீட்பு பணி JCB மற்றும் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இரவு முழுவதும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடியில் PMNRF வழியாக ரூ2 லட்சம் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, ரூ50,000 படுகாயமடைந்தோர் நிவாரணம்  ஜனாதிபதி திரௌபதி முர்முவில் துயரமான சம்பவம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மனதை உடைக்கும் சம்பவம். அரசாங்கம் பாதிக்கப்பட்டோருடன் நிற்கும். கனமழையால் பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் பயணம் அதிக ஆபத்துடன் உள்ளது.


காடழிப்பு, கட்டுப்பாடில்லா கட்டடங்கள், காலநிலை மாற்றம் – நிலச்சரிவுகளுக்கான முக்கிய காரணங்கள். கடந்த ஆண்டில் மட்டும் 200+ பேர் இமாச்சலில் இத்தகைய பேரழிவுகளில் உயிரிழந்துள்ளனர். அதே நாளில், காங்க்ரா மாவட்டத்தில் மற்றொரு பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 6 பேர் காயம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இது போன்ற பகுதிகளில் பயணிக்கும் போது விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.