ஏ.டி.எம்.யில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் ரூ.18,000 மோசடி!
கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த முதியவரிடம் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி மர்மநபர் ரூ.18,000 மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவமொக்கா டவுன் பகுதியில் வசித்து வரும் ராமச்சந்திரா (65) கடந்த 10-ந்தேதி பத்ராவதி டவுன் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார். அவருக்கு இயந்திரம் இயக்கத் தெரியாமல் தவித்தபோது, அங்கு இருந்த ஓர் அந்நிய நபர் உதவ முன்வந்துள்ளார்.
அவர், “நான் பணம் எடுத்து தருகிறேன்” என கூறி ராமச்சந்திராவிடமிருந்து ஏ.டி.எம். கார்டை பெற்றுக் கொண்டு சில நொடிகளில் பணம் எடுக்க முடியவில்லை என கூறியுள்ளார். பின்னர் கார்டை மாற்றி கொடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து ராமச்சந்திராவுக்கு அவரது செல்பேசியில் வங்கி கணக்கில் இருந்து ரூ.18,600 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வங்கியை அணுகியபோது தான், கார்டை மாற்றி கொடுத்த மர்மநபர் மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.இதையடுத்து, ராமச்சந்திரா பத்ராவதி பழைய டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை பிடிக்க வலைவீசி தீவிரமாக தேடிவருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!