ரயில்வேயில் 1,853 அப்ரண்டிஸ் பணியிடங்கள்.. அருமையான வாய்ப்பு - ஆக.7 கடைசி தேதி!

 

வடக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 1,853 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்மந்தப்பட்ட பிரிவில் அங்கீகாரம் பெற்ற ITI படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு).

ஐடிஐ மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 பெண்கள், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rrcpryj.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 7.08.2026.