டிகிரி முடித்தவர்களுக்கு 1,871 காலி பணியிடங்கள் - SSC மூலம் SI பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகளில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 1,871
டெல்லி காவல்துறை (ஆண்): 205
டெல்லி காவல்துறை (பெண்): 112
CAPFs SI (GD - CRPF, BSF, ITBP, CISF, SSB): 1,320
CISF SI (Fire - இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது): 234 (ஆண்)
சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி: டெல்லி காவல் மற்றும் CAPF பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
CISF SI (Fire) பணிக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது பத்தாம் வகுப்புடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
டெல்லி காவல் மற்றும் CAPFs SI (GD) பணிகளுக்கு 20 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். CISF SI (Fire) பணிக்கு 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். (ஆகஸ்ட் 1, 2026 அடிப்படையில் வயது கணக்கிடப்படும்).
SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்குக் கட்டணம் கிடையாது. இதர பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: செப்டம்பர் 30, 2026 (இரவு 11:00 மணி வரை)
கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: அக்டோபர் 1, 2026
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெறும்.
முதன்மை எழுத்துத் தேர்வு (Paper-I), உடல் தகுதி மற்றும் திறன் தேர்வு (PST / PET), இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக தங்களின் ஒருமுறைப் பதிவுடன் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.