காதலனை நம்பிச் சென்ற 19 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - 3 சிறுவர்கள் கைது!

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறுவர்கள் 3 பேரை போக்சோ வழக்குகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த  சிறுவன் இளம்பெண்ணைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுவனின் வீட்டிற்குச் சென்றபோது, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த மேலும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இக்கொடூர சம்பவத்திற்குப் பின், தனது தாத்தா மற்றும் பாட்டியின் உதவியுடன் பாதிக்கப்பட்ட இளம்பெண் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றச் செயலில் ஈடுபட்ட 3 சிறுவர்களையும் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.