undefined

வேலூரில்  2  சிறுவர்கள்  நரபலி?...  நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்!

 


தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில்    2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  குடியாத்தம் அருகே உள்ள ஏரிபட்டி பகுதியில் வசித்து வருபவர் வசந்த குமார்.  கட்டிட ஒப்பந்ததாரராக இருந்து வரும் வசந்த குமார்  பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குமார் நேற்று இரவு தன்னுடைய நண்பன் யோகராஜ் வீட்டிற்கு சென்றிருந்தார்.  


அவருடைய குழந்தைகள் 4 வயது தர்ஷன் , 5 வயது  யோகித்தை  கடைக்கு வருமாறு கூறி வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்றார். இந்நிலையில் நீண்ட நேரமாக குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை . இதனையடுத்து  பெற்றோர் வசந்தகுமாருக்கு தொடர்பு கொண்ட போது  அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.


பதற்றம் அடைந்த பெற்றோர் குழந்தைகளை தேடி சென்ற போது அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே குழந்தைகள் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர்.  இதை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். உடனடியாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர்  குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் வசந்தகுமாரை கைது செய்த நிலையில் குழந்தைகளின் பெற்றோருக்கு 14,000 ரூபாய் கொடுத்ததாகவும் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.  அதே சமயத்தில் கோவில் அருகே குழந்தைகள் கொல்லப்பட்டதால் நரபலியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.