இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் 2 பேர் உயிரிழப்பு!

 

காசா பகுதியில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த அமைப்பின் முக்கியத் தளபதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். போர்நிறுத்த ஒப்பந்தங்களுக்கு இடையே ஹமாஸ் தனது ராணுவக் கட்டமைப்பை ரகசியமாக வலுப்படுத்தி வருவதாக எழுந்த தகவலை அடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அகமது அபு தீரா, ஹமாஸ் அமைப்பின் தகவல் தொடர்புப் பிரிவின் தளபதியாகச் செயல்பட்டு வந்தார். இஸ்ரேல் படைகளுக்கு எதிராகப் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதில் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்லாம் ஹிஷாம் ரியாத் கனிடா & மஹ்மூத் ஹமீது யூசப் ஹம்தவுனா என இவர்கள் இருவரும் போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி, காசாவில் சிதைந்திருந்த ஹமாஸின் ராணுவக் கட்டமைப்புகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “பாதுகாப்புப் படைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எவரையும் நாங்கள் சும்மா விடமாட்டோம். அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் தாக்குதலுக்குத் தயாராகும் ஹமாஸின் முயற்சிகள் முறியடிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ‘Board of Peace’ குழுவினர் அமைதி ஒப்பந்தத்திற்காக முயற்சி செய்து வரும் வேளையில், இந்தத் திடீர் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் காசாவில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.