ஒரேநாளில் நெல்லை, தென்காசியில் அடுத்தடுத்து 2 பேர் கொலை... பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சி!
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு படுகொலைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் பஞ்சாயத்தின் தலைவராகப் பதவி வகித்த மகராஜன் என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் செங்கல்லால் தாடிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகே உள்ள பசும்பொன் நகரைச் சேர்ந்த சந்தானம் (28) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் வழிமறித்துக் கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு கொலைச் சம்பவங்களால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.