பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கிடங்கில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாண்டமங்கலம் பகுதியில் ராஜா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றபோது இந்த எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது.

வெடிமருந்து வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட பலத்த தீக்காயம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும், கிடங்கின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் மற்றவர்களையும் மீட்கும் தீவிர நடவடிக்கைகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.