பயணிகளின் கனிவான கவனத்திற்கு.... 2 மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து!
சென்னை தாம்பரம் மற்றும் விழுப்புரம் இடையே புதன் மற்றும் சனிக்கிழமைகளில் (நவம்பர் 5 மற்றும் 8) இரண்டு மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், திண்டிவனம் பணிமனையில் தொழில்நுட்ப மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் புதன்கிழமையும் சனிக்கிழமையும் பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஒலக்கூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், விழுப்புரத்திலிருந்து புறப்படும் மெமு ரயில், ஒலக்கூரிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரை இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!