undefined

அட்ரா சக்க... ஒரே வாட்ஸ் அப்பில் 2  தொலைபேசி எண்கள்..!!

 

தகவல் பரிமாற்ற செயலிகளில் சர்வதேச அளவில் அதிகப்படியான மக்களால்  பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் அப் செயலி தான் . பயனர்களைதக்க வைக்கவும், தொழில் நுட்ப வகையில் மேம்படுத்தவும் மெட்டா நிறுவனம் அடுத்தடுத்த அப்டேட்களை செய்து வருகிறது. உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர். இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.அந்த வகையில் தற்போது புதிய ஒரு அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

WhatsAppக்கான இரட்டை தொலைபேசி எண்களை எவ்வாறு செயல்படுத்துவது? 

1. உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.

2. மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்து, settings இற்குள் செல்ல வேண்டும்.

3. உங்கள் சுயவிவரப் பெயருக்கு அடுத்துள்ள கீழ்தோன்றும் அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.

4. வாட்ஸ்அப் கணக்கில் மற்றொரு மொபைல் எண்ணைச் சேர்க்கவும்.  இதன் மூலம் உங்கள் வாட்ஸ் அப்பில் இரண்டு தொலைபேசி எண்களை பயன்படுத்த முடியும்.