திருமண மண்டபத்தில்  அடுத்தடுத்து 2 தூய்மைப் பணியாளர்கள் கொடூரமாக அடித்துக் கொலை!  

 

தமிழகத்தின் தலைநகரான சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த 2 தூய்மைப் பணியாளர்கள், அடுத்தடுத்து சில மணி நேர இடைவெளியில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி நுகர்வோர் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் சம்பவத்தில், கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 50 என்பவர் தியாகராயா சாலையில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலிசார் நடத்திய   ஆய்வில், மதுக்கடையில் ஏற்பட்ட  தகராறு காரணமாகப் பாலாஜி வயது 34 என்ற ஆட்டோ ஓட்டுநர் இவரைக்   அடித்துக் கொன்றது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சியாக, அதே திருமண மண்டபத்தில் தூய்மைப் பணிகளை மேற்பார்வையிட்டு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் வயது 46 என்பவர், மண்டபத்தின் வாகன நிறுத்தப் பகுதியில் ரத்தக் காயங்களுடன் உயிருக்குத் போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலை குறித்து மாம்பலம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைப் பெற்றுத் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேலை வாங்கும் போது ரவிக்குமார் ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த சொர்ணகுமார் வயது 65 என்ற சக தூய்மைப் பணியாளர், ரவிக்குமாரைக் கட்டையால் அசாக்கிரதையாக அடித்துக் கொன்றது தெரியவந்தது.

சில மணி நேர இடைவெளியில் ஒரே பகுதியில் அரங்கேறிய இந்த அடுத்தடுத்த  கொலைகள் குறித்து மாம்பலம் போலிசார் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ராஜேந்திரனைக் கொன்ற ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி மற்றும் ரவிக்குமாரைக் கொன்ற சொர்ணகுமார் ஆகிய இருவரையும் போலிசார்    கைது செய்து, அவர்களிடம் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கட்டை உள்ளிட்ட  ஆதாரங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.