மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
Sep 7, 2026, 08:50 IST
மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டம் பாய்பங் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அங்குத் தீவிரத் தேடுதல் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது, அங்குப் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை இலக்காக வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இடத்திலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.