2 வாரம் வடகிழக்கு பருவமழை ஓய்வு... !
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வங்கக்கடலில் அக்டோபர் மாதத்திலேயே இரண்டு மழை நிகழ்வுகள் உருவாகி, அதில் ஒன்று புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கனமழையை கொட்டியுள்ளது. இதனால், பருவமழை ஆரம்ப கட்டத்திலேயே தீவிரம் பெற்றது.
வானிலை நிபுணர்கள் தெரிவிப்பதாவது, ஒரு புயல் கரையை கடந்தவுடன் பருவமழையில் ஒரு சிறிய இடைவெளி ஏற்படுவது இயல்பானது. அதன் அடிப்படையில், வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் பெறுவதற்கு சுமார் இரண்டு வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. அதுவரை தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மேற்குத் திசை காற்றின் போக்கால் வெப்பநிலை உயரும் நிலையில், வெப்பசலனத்தால் இரவு அல்லது அதிகாலை நேரங்களில் சில இடங்களில் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பருவமழை மீண்டும் தீவிரமடையும் காலம் நவம்பர் 10க்கு பிறகு எனவும், அதன் பின்னர் வங்கக்கடலில் புதிய வானிலை நிகழ்வுகள் உருவாகி மழையை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!