இந்த கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு எந்தெந்த தேதிகளில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை?! - மொத்தம் 6 தொடர் விடுமுறைகள் - நோட் பண்ணிக்கோங்க!

 

2026-27 ஆம் கல்வியாண்டிற்கான அரசு பொது விடுமுறைப் பட்டியலின்படி, பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 6 முக்கிய அரசு விடுமுறைகள் வெள்ளிக்கிழமைகளில் வரவுள்ளன.

அரசு நாட்காட்டியின்படி, இந்த பண்டிகைகளும், முக்கிய விடுமுறை தினங்களும் வெள்ளிக்கிழமைகளில் அமைகின்றன.

கிருஷ்ண ஜெயந்தி: செப்டம்பர் 4

காந்தி ஜெயந்தி: அக்டோபர் 2

கிறிஸ்துமஸ் பண்டிகை: டிசம்பர் 25

ஆங்கிலப் புத்தாண்டு: ஜனவரி 1 (2027)

பொங்கல் பண்டிகை: ஜனவரி 15 (2027)

புனித வெள்ளி : மார்ச் 26 (2027)

இந்த பண்டிகை நாட்கள் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், மாணவர்களுக்கு வழக்கமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையோடு சேர்த்துத் தொடர்ந்து 3 நாட்கள் வார இறுதி விடுமுறை கிடைக்கிறது.

ஒரே கல்வியாண்டில் 6 முறை இப்படித் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், சுலபமாகச் சுற்றுலா செல்லவும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.