தமிழக அஞ்சல் துறையில் 2,095 காலிப் பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

 

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உரிய தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மொத்தம் 2,095 கிராமின் தாக் சேவக் பணியிடங்கள் காலியாக உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், அடிப்படை கணினி அறிவு பெற்றிருப்பதும் கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு எதுவும் இல்லாமல், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள நபர்கள் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் செப்டம்பர் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.